திமுக பிரமுகர் தற்கொலை - மன அழுத்தம் காரணமா?

திமுக பிரமுகர் தற்கொலை - மன அழுத்தம் காரணமா?

திமுக பிரமுகர் தற்கொலை - மன அழுத்தம் காரணமா?
Published on

நாமக்கல்லில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கப்பள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆனந்த் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நாமக்கல்லில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், அவரது மனைவி இன்று வெளியூர் சென்றிருந்தார். அப்போது ஆனந்த் பண்ணை வீட்டிற்கு சென்று நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவர் ஆனந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் எனவும், இவருக்கு பல கோடி சொத்து உள்ளதால் பணம் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com