ஐடி விங்......திமுகவும் களத்தில் குதித்தது

ஐடி விங்......திமுகவும் களத்தில் குதித்தது

ஐடி விங்......திமுகவும் களத்தில் குதித்தது
Published on

தகவல்தொழில்நுட்ப துறை அனைத்திலும் புகுந்து விட்ட நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களை அதில் அப்கிரேட் செய்து வருகின்றனர். இந்த பட்டியலில் திமுகவும் தற்போது இணைந்துள்ளது. 

தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுகவை தொடர்ந்து தற்போது திமுகவும் தகவல்தொழில்நுட்ப அணியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் காலத்திற்கேற்ற வகையில், அனைத்து தரப்பு மக்களிடமும் விரைந்து கொண்டு சேர்க்கும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி எனும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அணியின் செயலாளராக முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். 
அரசியல் கட்சிகள் தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கு அறிக்கைகளை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்த அறிக்கைகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் வாயிலாக கட்சி உறுப்பினர்களையும், மக்களையும் சென்று அடைந்தது. ஆனால் தற்போது உலகமே கையடக்க செல்போனில் இயங்கி வருவதால் சமூகவலைதளங்களின் வாயிலாக அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் நரந்திரமோடி உள்ளிட்டோரின் வெற்றிக்கு பின்னால் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மிக முக்கியப் பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com