ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக பங்கேற்பு : துரைமுருகன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக பங்கேற்பு : துரைமுருகன்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக பங்கேற்பு : துரைமுருகன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் “அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்பார்கள். அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்கள் ” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com