\
பழனி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று !

பழனி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று !

பழனி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று !
Published on: 

பழனி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.செந்தில்குமாருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துவந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com