நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, பதினைந்து நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவகாசம் அளித்துள்ளார். ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18-ஆம் தேதியே நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது எனவும் கூறியுள்ளார்.

