கரூரில் திமுக முப்பெரும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டு கரூர்-திருச்சி புறவழிச் சாலையில் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும்விழா நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய திமுக முப்பெரும் விழா என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.