ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்புதிய தலைமுறை

நாடாளுமன்றம் முன் திமுக எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Published on

மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இதனை தேசிய பேரிடராக அறிவித்து சுமார் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக எம்.பி.க்களும் வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து தற்போதுவரை நிதி வழங்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்ட மசோதா: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

இதனை கண்டித்து நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து இன்று எதிர்ப்பை பதிவு செய்யும் திமுக எம்.பி.க்கள், நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே, மாநில அரசின் நிதி பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்து டெல்லியில் கேரள அரசு சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக எம்.பி. க்கள் பங்கேற்று ஆதரவு அளிக்க உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com