\
திமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா

திமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா

திமுக எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா
Published on

திமுக எம்.பி டி.ஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆகிறார்.

இந்நிலையில், திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com