கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது - ஆர்.எஸ். பாரதி

கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது - ஆர்.எஸ். பாரதி
கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது - ஆர்.எஸ். பாரதி

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான 7 பேரை விடுவிப்பதற்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதை செய்ய அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார். மேலும் கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகளாகத்தான் கருதவேண்டுமே தவிர, தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சி சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தேர்தல் கூட்டணி என்பது வேறு, கட்சிக் கொள்கை என்பது வேறு எனவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளதைத் தெரிந்துதான் 7 பேர் விடுதலையை திமுக வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com