"அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உண்டு"-விஜய் அரசியல் வருகை குறித்து கனிமொழி எம்.பி!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
MP கனிமொழி
MP கனிமொழிமுகநூல்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், நடிகர் விஜய், ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் என்பவரை நியமித்து, அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை தனது சமூக வலைதளப்பக்கதில் வெளியிட்டிருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் சீமான், பாஜக நயினார் நாகேந்தினர், விசிக திருமாவளவன் போன்ற பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் தங்களது கருத்து தெரிவித்திருந்தனர்.

MP கனிமொழி
”அரசியல் என்பது பரமபத விளையாட்டு.. இதில் ஏணிகளும் உண்டு.. பாம்புகளும் உண்டு” - தராசு ஷ்யாம்

அந்தவகையில் திமுக எம்,பி கனிமொழி இது குறித்து தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆகவே அவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமையும் உண்டு.எனவே இது குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எந்தபாதிப்பும் இருக்காது.முதலமைச்சரின் நல்லாட்சியை பொறுத்துதான் அதற்கான ஒரு பரிசாகதான் மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com