தமிழ்நாடு
அமைச்சர் பொன்முடி மகனுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் பொன்முடி மகனுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் பொன்முடியின் மகனும் திமுக எம்.பி.மான கவுதம் சிகாமணி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் டாக்டர் கவுதம் சிகாமணி, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருக்கிறார். சென்னையில் இருந்த கவுதம் சிகாமணிக்கு நேற்று திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு பகுதியல் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதனுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.