உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்பி ஆ. ராசா
உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்பி ஆ. ராசாpt web

பாஜக டெல்லியில் ஆட்சியமைத்தது போல் தமிழ்நாட்டில் முடியாது.. ஏன்? விளக்கும் ஆ.ராசா

அமித் ஷா பேசியிருக்கும் பேச்சுக்களின் மொத்த தொகுப்பையும் சுருக்கி சொல்வதாக இருந்தால் ‘அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூளுரை’. இவற்றைத் தவிர வேறு எதையும் அந்த பேச்சில் கண்டுபிடிக்க முடியவில்லை.
Published on

செய்தியாளர் ரமேஷ்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிகளும் கேள்வி - பதில் எனும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

முதலில் பேசிய ஆ.ராசா...

"தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் 5 முறை பிரதமர் வந்தார்” - திமுக எம்.பி.ஆ.ராசா
"தமிழ்நாட்டை பார்த்து பயந்ததால் 5 முறை பிரதமர் வந்தார்” - திமுக எம்.பி.ஆ.ராசா
A

உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசியதை அறிவீர்கள். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவர் பேசியிருக்கும் பேச்சுக்களின் மொத்த தொகுப்பையும் சுருக்கி சொல்வதாக இருந்தால் ‘அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூளுரை’. இவற்றைத் தவிர வேறு எதையும் அந்த பேச்சில் கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்துறை அமைச்சருக்கு உள்ள தகுதி, பொறுப்பு, கடமை உணர்ச்சி என எது குறித்தும் கவலைப்படாமல், அவதூறுகளை அள்ளி வீசுவதும், ஒரு மாநிலத்தில் மாற்றுக்கட்சி அரசாங்கம் நடந்தால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும், மதவாதப் பிளவை வேண்டுமென்றே உருவாக்கி அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் கலவரத்தையும் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? அறுவடை செய்யலாமா? என்ற அருவருப்பான உணர்ச்சி அவர் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையில் குந்தகம் விளைவிக்கும் பேச்சை பேசியிருக்கிறார். அவர் பேச்சை ஒவ்வொரு வரியாக எங்களால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். தமிழ்நாடு அமைதிபூங்காவாக இருப்பதை விரும்பாமல், அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித் ஷாவின் பேச்சை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

A

ஒன்றிய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காமல் இருந்தாலும்கூட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் நிதியிலிருந்து இழப்பீடு செய்து வளர்ச்சி திட்டப் பணிகளை வேகமாக நல்ல முறையில் வழங்கி நடைமுறைப்படுத்துவதை செரிக்க முடியாத ஒன்றிய அரசும் பிஜேபி கட்சியும் அமித்ஷாவை வரவழைத்து இப்படிபட்ட கேலிக் கூத்தான அருவருப்பான அரசியல் நாகரீகத்திற்கு புறம்பான காரியத்தை செய்து இருக்கிறார்கள். அமித்ஷா என்று தனி மனிதனுக்கு மட்டுமல்ல அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை அருவருப்பான போக்கை இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

Q

கடந்த ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டதை விட அதிகமாக ஆறு லட்சம் வரை நிதி வழங்குகிறோம் என்கிறார்களே?

A

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மொத்த நேரடி நிதி வருவாய் எவ்வளவு.. இப்போது எவ்வளவு. நான்கு மடங்கு வரை நேரடி நிதி வருவாய் உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ரயில்வேத்துறை அமைச்சரிடம், ‘மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் வந்தது... எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது.... தற்போது எவ்வளவு வருவாய் வருகிறது.. எவ்வளவு நிதி அளிக்கப்படுகிறது...’ என்று காட்டினேன்.. அப்போதும் நிதியளவு குறைவாகத்தான் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Q

அமித் ஷாவை பார்த்தால் திமுகவுக்கு பயம் என்று நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரே? அந்த அளவுக்கு ஷாக் அடிக்கக்கூடியவராக அமித் ஷா இருக்கிறாரா?

A

அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். எங்களை பார்த்து ஷாக் அடித்துதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த பிளவுவாதமும் மத அரசியலும் இங்கு எடுபடவில்லை. எல்லா தேர்தலிலும் முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் திமுக பின் இருக்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு ஜீரணித்துக் கொள்ள முடியாமல்தான் வந்து பேசுகிறீர்கள். உங்களைப் பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் ஐந்து முறை ஏன் தமிழகத்திற்கு வந்தார்? சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் பிரதமர் யாராவது ஐந்து முறை வந்து பார்த்திருக்கிறார்களா? யாருக்கு பயம்.

Q

திமுக தேர்தல் அறிக்கைகள் குறிப்பிட்டு 10 சதவிகித திட்டங்களை மட்டும்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்களே?

A

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 98.5% நாங்கள் நிறைவேற்றி விட்டோம். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மட்டும்தான் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதற்கும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு எதை செய்யவில்லை, சொல்லாததையும் செய்துள்ளோம். விவாதத்திற்கு நான் தயார். ஆனால், தயவு செய்து இந்தியில் மட்டும் பேசாதீர்கள். எய்ம்ஸ் தொகைக்காக இன்னும் காத்துக் கொண்டு உள்ளோம்.

Q

டெல்லியில் வெற்றி பெற்றதுபோல் தமிழகத்தில் வெல்வோம் என்று அமித்ஷா சொல்கிறாரே?

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் தத்துவம் என்ன? ஊழலை மட்டுமே எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்குப் பின் எதாவது அரசியல் தத்துவம் இருந்ததா?
A

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் தத்துவம் என்ன? ஊழலை மட்டுமே எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்குப் பின் எதாவது அரசியல் தத்துவம் இருந்ததா? அவருக்குப் பின் எந்தத் தலைவர்களாவது இருந்தார்களா? நாங்கள் அமித் ஷாவையும் மோடியையும் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள்தான். அவர்களுக்குப் பின்னிருக்கும் அரசியல் தத்துவம் எல்லா இடங்களிலும் படையெடுத்து வெல்கிறதே.. ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் இங்கு உள்ளது. அதனால் அவர்கள் இங்கு வர முடியாது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு கால் பதிக்க முடியாது. நாங்கள் டெல்லி, ஹரியானா கிடையாது.. தமிழ்நாடு. அதனால் நீங்கள் இங்கு வர முடியாது.

Q

தொகுதி மறு வரையறை குறித்து திமுக அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.. ஆனால், அதுகுறித்து அமித் ஷா எதுவும் பேசவில்லையே?

குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவைப் பிளவுபடுத்தும் என்று சொன்னார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கேட்கின்ற திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பிளவுவாதிகள், பிரிவினைவாதிகள் என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் தற்போது எங்கே? இதையெல்லாம் ஜனநாயகத்தின் நான்காவது தூண்தானே கேட்கவேண்டும்.
A

எந்த அடிப்படையில் தொகுதி மறு வரையறை வருகிறது. இப்படிப்பட்ட எண்ணமே இதற்குமுன் இல்லை என்றால் ஏன் 800கும் மேற்பட்ட இருக்கைகளை வைத்து நாடாளுமன்றத்தைக் கட்டினீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்கும்போது, தொகுதி மறுவரையறை செய்த பின்னர் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்று பிரதமர் பேசியது உண்மைதானே. தென் மாநிலங்கள் இல்லாமலேயே எந்த மசோதாவையும் அரசியல் சட்ட திருத்தத்தையும் அவர்களால் கொண்டுவர முடியும் என்பதுதான் உள்ளிருக்கும் சூது. அந்த சூரை முறியடித்த ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இதை டெல்லி வரை ஒப்புக்கொள்கிறார்கள். 2027 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நியாயமாக இருக்குமா? வெளிப்படையாக இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவைப் பிளவுபடுத்தும் என்று சொன்னார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கேட்கின்ற திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் பிளவுவாதிகள், பிரிவினைவாதிகள் என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் தற்போது எங்கே? இதையெல்லாம் ஜனநாயகத்தின் நான்காவது தூண்தானே கேட்கவேண்டும்.

Q

22ஆம் தேதி முருகன் மாநாடு நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காக முருகனைக் கையாளுகிறார்கள் என்று சில அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரே?

A

உண்மைதானே. வேறு என்ன காரணம். இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், இந்துத்துவவாதிகள் உள்பட எல்லோருமே கலந்து கொண்டார்கள். எங்களுக்கு ஒன்றும் பாரபட்சம் இல்லை. அந்தக் கொள்கை எங்களுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் வேறுவிஷயம். ஆனால், இங்கு ஒரு கட்டமைப்பு இருக்கிறது.. கோயில்களைப் பராமரிக்க வேண்டும். அதன் சொத்துகளை பராமரிக்க வேண்டும். அதை முன்னேற்றுவதற்காக அந்தத் துறையை நடத்துகிறார்கள்.. நீங்கள் ஏன் நடத்துகிறீர்கள். இந்து மத ஒற்றுமைக்காகவோ முருகனுக்காகவோ இந்த முருகன் மாநாடு அல்ல. மதவாதத்தை ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அதை மதுரை மக்களே விரும்பவில்லை. இது அவர்களுக்கே தெரியும்.

தமிழ் குறித்து அவ்வளவு பேசுகிறீர்கள் கீழடி ஆய்வை ஏன் மீண்டும் மீண்டும் தவிர்த்து வருகிறார்கள். கீழடி ஆய்வை இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பியிருக்கிறோம். அதேபோல் இரும்பை கண்டுபிடித்து ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகிவிட்டது.. நாங்கள்தான் புழக்கத்தில் வைத்திருந்தோம் என்று தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தோம். அது இரண்டையும் இவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதற்காக அதிகாரி அமர்நாத் என்பவரை மூன்று முறை இடமாற்றம் செய்கிறார்கள். இவையெல்லாம் தமிழர்களுக்கு தமிழர்கள் கலாச்சாரத்திற்கு திராவிடர்களுக்கு எதிரானவை என்பதை அறிந்தோ அறியாமலோ அப்பட்டமாக வெளிக்காட்டி கொள்கிறார்கள் இதற்கான அறுவடையை தண்டனையை 2026 தேர்தலில் நிச்சயம் சந்திப்பார்கள்.

Q

தமிழ் மொழியில் பேச முடியவில்லை அது வருத்தமாக இருக்கிறது என்று அமித்ஷா தனது பேச்சை ஆரம்பித்திருக்கிறாரே?

A

மற்ற மாநிலங்களின் மொழிகளை இவர்கள் வளர்த்து விட்டார்களா? குஜராத் மொழி, பீகார் மொழி எல்லாம் என்ன ஆனது. மற்ற வட மாநில மொழிகள் எல்லாம் எங்கு போனது? வட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களில் இருந்த மொழிகள் இவர்கள் ஆட்சி வந்த 15 ஆண்டுகளில் இருக்கிறதா.? இந்தியை கொண்டு வந்து விட்டார்கள் அதற்குப் பிறகு சமஸ்கிருதத்தை கொண்டு வருவார்கள். இல்லாத சரஸ்வதி நதிக்கு இவ்வளவு பணம்.. பேசாத சமஸ்கிருதத்திற்கு அவ்வளவு பணம். ஆனால், எங்கள் கீழடிக்கு, எங்களது நாகரீகத்திற்கு எந்தவொரு அங்கீகாரமும் கொடுக்க மாட்டீர்கள் என்றால் நாங்கள்தான் கேட்க வேண்டும் இந்தியாவோடுதான் நாங்கள் இருக்கிறோமா? என்று..

Q

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கிறது.. ஆனால், இப்போதே உள்துறை அமைச்சர் தனது பரப்புரையைத் துவங்கியதுபோல் தெரிகிறதே?

A

எத்தனை முறை மோடி வந்தாரோ அத்தனை சதவிகிதம் நீலகிரியில் வாக்கு வித்தியாசம் இருந்தது. அதுபோல் எத்தனை முறை அமித்ஷா வருகிறாரோ, அவ்வளவு வாக்குகள் எங்களுக்கு அதிகரிக்கும். அவர்கள் வந்தால்தான் எங்கள் 200 என்ற இலக்கைத் தாண்டி அதிகம் செல்வோம்.

Q

இம்முறைப் பயணத்தில் உள்துறை அமைச்சர் அதிகமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறாரே?

A

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எல்லாம் அவர்கள் பேசலாமா? பில்கிஸ் பானு வழக்கில் நடந்ததை பார்த்த பிறகு அமித்ஷா இதைப்பற்றி பேசலாமா.? குஜராத்தில் அந்த குற்றவாளிகள் தீர்ப்பை ரத்து செய்து வெளியில் விடும்போது பாஜகவினர் செல்கிறார்கள். இதற்கு அமித்ஷா அனுமதி அளிக்கிறார். மணிப்பூரில் என்ன நிலைமை பிரதமர், ஆளுநர் பதில் சொன்னார்களா? காவல்துறை பாதுகாப்புடன் பெண்களைக் கொண்டு சென்று கற்பழிக்கிறார்கள். அந்த வீடியோ காட்சிகள் வெளியானது.. முதலமைச்சரை உங்களால் எடுக்க முடியவில்லை. எத்தனையோ பார்த்துவிட்டு ஊமை போல் அமர்ந்திருந்தார்கள்.. வெட்கமாக இல்லையா? நாங்கள்தான் கேட்டோம்...

Q

ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆட்சி அமைப்பதா பேசியிருந்தாரே?

A

இதுதான் உண்மையான பிளவு வாதம். ஒரே தேசம் ஒரு இந்தியா என்றால் ஒடிசாவில் யார் வந்தால் என்ன? அவர் நல்லவரா கெட்டவரா என்பது குறித்துதானே பேச வேண்டும். அங்க போய் ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்ட ஒருவர், எப்படி பாரத் மாதா கி ஜே! ஒரே இந்தியா என்று சொல்ல என்ன தகுதி உள்ளது.. எல்லாம் பொய். ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு மோடியும் அமித்ஷாவும் பகடைக்காய்.... அது தமிழ்நாட்டில் நடக்காது என்பதால் விரக்தியில் உள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com