\
திமுக எம்எல்ஏக்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவு

திமுக எம்எல்ஏக்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவு

திமுக எம்எல்ஏக்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவு
Published on: 

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா சக்ரபாணி வாய்மொழியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆட்சியமைக்க ஆளுநர் யாரை அழைப்பார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை எதிர்கட்சியாக இருக்கும் திமுக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசியல் சூழல் குறித்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com