திமுக எம்எல்ஏ பொன்னுசாமி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி. தொடர்ந்து நேற்று புளியங்காட்டில் உள்ள வீட்டில் அவர் தங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்காக நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பொன்னுசாமி.

பின் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்னுசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்எல்ஏ பொன்னுசாமி
அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களில் சீன மொழிப் பெயர்கள்! மீண்டும் எழும் சர்ச்சை...!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com