\
ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்
Published on

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்பழகனின் உடல்நலம் குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசியில் விசாரித்தார். அத்துடன் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com