அன்பில் மகேஷ் கனவில் அமைச்சர் தங்கமணி : அவையில் சிரிப்பலை
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தனது கனவில் வந்ததாக திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ், கஜா புயல் மற்றும் ஒக்கி புயலின் போது சிறப்பாக பணியாற்றிய மின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், “மின்துறை மீதான விவாதத்தில் இன்று நான் பேச வேண்டும் என்ற முடிவுசெய்த நிலையில், நேற்று இரவு என் கனவு முழுவதும் அமைச்சர் தங்கமணி தான் வந்தார். அவர் ஆக்ரோஷமாக என்னிடம் விவாத்திதார்” இவ்வாறு கூறினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, “நான் எப்போதும் அவையில் ஆக்ரோஷமாக பேசியது இல்லை. அரசின் கருத்துக்களை அழுத்தமாக எடுத்து வைப்பேன்” என்றும் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அன்பில் மகேஷ் எப்போது கன்னியமாகவும், அமைதியாக பேசக்கூடியவர். அவரது தொகுதி பிரச்சனையை மட்டும் பேசி பெறுபவர். தற்போது துவக்கத்திலேயே அமைச்சர் கனவில் ஆக்ரோஷமாக பேசினார் என்று குறிப்பிடுவது, ஏதோ உள்நோக்கம் கொண்டது போல் தோன்றுகிறது” என்றார்.