\
ஊரடங்கில் தனது மாடுகளை பராமரிக்கும் திமுக எம்.எல்.ஏ..!

ஊரடங்கில் தனது மாடுகளை பராமரிக்கும் திமுக எம்.எல்.ஏ..!

ஊரடங்கில் தனது மாடுகளை பராமரிக்கும் திமுக எம்.எல்.ஏ..!
Published on: 

ஊரடங்கு நேரத்தில் தனது மாடுகளை குளிப்பாட்டி உணவளித்ததாக திமுக எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருப்பவர் தாமோ அன்பரசன். இவர் குன்றத்தூரில் உள்ள தனது தோட்டத்தில் 4 நாட்டு மாடுகள், ஒரு கிர் வகை மாட்டையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஊரடங்கால் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில், இவர் தனது மாடுகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். மாடுகளை குளிப்பாட்டியதுடன், அவற்றுக்கு உணவினையும் வழங்கியுள்ளார். அதைப் புகைப்படமாக எடுக்கச்சொல்லி தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com