”எப்போது ரெய்டு வருமோ என திமுக அமைச்சர்களுக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது” – ஜெயக்குமார் பேட்டி

"அதிமுக-வுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு தனி மனிதர். அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்file image

அதிமுக சார்பில் நாளை விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்தும், அதிமுக மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் குறித்தும் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசியபோது...

eps pm modi
eps pm modipt desk

”அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக அதிகரிக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இதன்படி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வந்தது. இன்று உறுப்பினர் சேர்க்கைக்கு கடைசி நாள் என்பதால் சென்னை ராயபுரம் பகுதியில் மட்டும் 1.75 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கு மக்களை பாதிக்கும் எது குறித்தும் கவலையில்லை. இந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னர் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்திருப்பது ஒரு சுயேட்சை என்ற அடிப்படையில் தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை

ஏனென்றால் அதிமுக சார்பில் அவருக்கு எதிராக ஏற்கெனவே கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ரவீந்திரநாத். அந்த வகையில் ரவீந்திர நாத்துக்கு சுயேட்சை வேட்பாளர் என்ற வகையில் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி வந்து கொண்டே இருக்கிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. தற்போது அமைச்சர் பொன்முடிக்கு நெஞ்சுவலி ஆரம்பிக்கிறது. அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி வரும். எப்போது கைது செய்வார்கள் என்று பொன்முடி இரவெல்லாம் தூங்காமல் இருப்பார். அப்படி தான் அமைச்சர்களுக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர் யாரும் தூக்கமாட்டார்கள்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தான் சரி. சிறையில் சிறைவாசியாக இருக்கும் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது வீண் செலவு. அந்த வகையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்து தான் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். நானும் சிறைக்குச் சென்றிருக்கிறேன்.. சிறையில் இருந்தபோது தரையில் தான் படுத்து உறங்கினேன். சிறையில் இருக்கும் தண்ணீரை தான் குடித்தேன். ஆனால், செந்தில் பாலாஜிக்கு அப்படியா.. ஏ கிளாஸ் வசதி.. ஏன் அவருக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி கூட வரும்.. ஏசி வசதி கூட செய்திருக்கலாம்.

ஓ பி ரவீந்திரநாத்
ஓ பி ரவீந்திரநாத்கோப்புப் படம்

ஆகையால் செந்தில்பாலாஜி வசதிகளை அமலாக்கத்துறை நேரில் சென்று பார்க்க வேண்டும்.. ஆளும் கட்சி என்பதால் கூடுதல் வசதிகள் அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

முதலமைச்சருக்கு மேகதாது அணை பற்றி கவலையில்லை.. பெங்களூரிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அவருக்கு எப்போது அவரு வீட்டுக்கு ரைடு வருவாங்க, எப்போது ஆட்சி கலையும் என்று பயம்.

காய்கறி விலை உயர்வு வாட்டுகிறது. தக்காளி விலை எவ்வளவு என்று தெரியும். எங்க வீட்லயே தக்காளி சாதம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். வெங்காய சட்னி அது கேட்டாலும் கிடையாது என்கிறார்கள். சின்ன வெங்காயம் விலை 250-க்கு விற்கிறது.

திமுக ஆட்சியில் தான் காவிரியில் கர்நாடகாகத்தில் அணைகள் அனைத்தும் கட்டப்பட்டது. திமுக ஆட்சி விவசாயிகளைப் பற்றி கவலை இல்லாத ஆட்சி. திமுக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது.

senthilbalaji, ed
senthilbalaji, edpt web

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படும் அரசாக உள்ளது. இந்தியாவிலேயே கொலை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொலை நகரமாக சென்னை உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டத்தை மீறுவோர் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டனர். அதிமுகவினர் வழக்குகளை பார்த்து அஞ்சமாட்டோம். ஆனால், திமுகவினர் அப்படியல்ல. மிசாவை பார்த்து ஓடியவர்கள் திமுகவினர்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com