இவன் தான் அந்த சார்
இவன் தான் அந்த சார்முகநூல்

'யார் அந்த சார்?' Vs 'இவன் தான் அந்த சார்' - அதிமுகவுக்கு போட்டியாக பதாகைகளுடன் வந்த திமுகவினர்!

யார் அந்த சார்? இவன் தான் அந்த சார் என்ற பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்த திமுக உறுப்பினர்கள்.
Published on

செய்தியாளர்: ஸ்டாலின்

யார் அந்த சார்? என்ற பேட்ஜ் உடன் அதிமுக, இவன் தான் அந்த சார் என்ற பதாகைகளுடன் திமுகவினரும் இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர்த்து மற்றொரு சார் தொடர்பில் இருப்பதாகவும், அந்த சார் யார் என கண்டறிய வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யார் அந்த சார்? என்ற பதாகைகளுடன் மக்கள் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில்.. யார் அந்த சார் பேட்ஜுடன் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே அண்ணா நகரில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுதாகரின் புகைப்படத்தை காட்டி, ’இவன் தான் அந்த சார்’ என்ற வாசகத்துடன் துண்டு சீட்டு கொடுத்து திமுகவினர் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ’யார் அந்த சார்?’ ...’இவன் தான் அந்த சார்’ என நோட்டீஸ் காண்பித்து கோஷம் எழுப்பினர்.

இவன் தான் அந்த சார்
"மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்" - சீமானுக்கு துரைமுருகன் பதிலடி!

திமுக உறுப்பினர்கள் காண்பித்த அந்த நோட்டீஸ்சிலும், அதிமுக பிரமுகர் சுதாகர் புகைப்படம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், ’யார் அந்த சார் ? இவன் தான் அந்த சார்’ என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ தினமும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக பேரவைக்கு வந்தனர். அதற்கு விடை கொடுக்கும் விதமாக தான், ’இவன் தான் அந்த சார்’ என தெரியப்படுத்துகிறோம். ஆட்சியாளர்களும், விசாரணை அதிகாரிகள் மீது குறுக்கீடு செய்வது போல் அதிமுக நடவடிக்கை இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com