திமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்
மதுரையில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திமுக பிரமுகரான ராஜா என்பவர் நேற்றிரவு 11 மணியளவில், கே.புதூர் ஜவஹர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பத்து பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதில், நிகழ்விடத்திலேயே ராஜா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, சந்தேகத்துக்குரிய வகையில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு வாடிப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.