\
DMK Leader TKS Elangovan Raises Doubts Over Bypoll Results
டிகேஎஸ் இளங்கோவன்web

"இடைத்தேர்தல் முடிவுகள், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” - டிகேஎஸ் இளங்கோவன்

இடைத்தேர்தல் முடிவு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Published on: 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். இந்தத் தேர்தல் சூடே ஆறாத 5 மாதங்களியே மற்றுமொரு தேர்தலுக்கு தயாரானது தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது.

BY-Election Results
BY-Election ResultsPt web

இந்தச்சூழலில் தான், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், இரண்டு தொகுதிகளிலுமே தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா முன்னிலை வகிக்கின்றனர். அதேசமயம், திமுக வேட்பாளர்களான சுகன்யா மற்றும் பரந்தாமன் 2-வது இடத்திலும், அதிமுக வேட்பாளர்களான கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் 3 இடத்திலும் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

DMK Leader TKS Elangovan Raises Doubts Over Bypoll Results
”தவெக ஜெயிக்க பாமக காரணம்...” - பின்னணியை விளக்கும் கோட்டீஸ்வரன்

இந்தச்சூழலில் தான், திமுக செய்தித் தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இடைத்தேர்தல் முடிவுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்திருகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”இடைத்தேர்தல் இறுதி முடிவில் தான் என்ன நிலை என்று தெரியும் இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் எங்கெல்லாம் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதோ.. அங்கெல்லாம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்ற செய்தி 2 நாட்களுக்கு முன்பு நாளிதழில் செய்தி வந்துள்ளது

டி.கே.எஸ். இளங்கோவன்
டி.கே.எஸ். இளங்கோவன்Pt web

இதில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? அல்லது அல்லது ஞானேஷ் குமாரின் பங்களிப்பு ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த முறை இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தோல்வி அடைந்தது.. ஆனால், இந்த முறை முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் முறையாக நடைபெறுகிறதா என்ற ஐயம் எழுகிறது.

தேர்தல் ஆணையம் ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுத்து தேர்தல் நடத்தினால் அதற்கு ஏற்ப தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் வரவேற்கவில்லை; இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடித்து உள்ளார்கள் என்பதைப் பார்த்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

DMK Leader TKS Elangovan Raises Doubts Over Bypoll Results
#BY-Election Results | 2 தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com