“அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள்” - மு.க.ஸ்டாலின்

“அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள்” - மு.க.ஸ்டாலின்

“அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள்” - மு.க.ஸ்டாலின்
Published on

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலவேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள மு.க.ஸ்டாலின், பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள். அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்

முன்னதாக தமிழிசைக்கு வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி எம்பி கனிமொழி, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசைக்கு வாழ்த்துகள். தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com