\
கிழக்கு கடற்கரை சாலையில் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங்... வெளியான புகைப்படங்கள்!

கிழக்கு கடற்கரை சாலையில் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங்... வெளியான புகைப்படங்கள்!

கிழக்கு கடற்கரை சாலையில் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங்... வெளியான புகைப்படங்கள்!
Published on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் அதிகாலை வேளையில் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில மாதங்களாக சைக்கிளிங் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை மேற்கொண்ட சைக்கிளிங் வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில் ஆற்றுப் பாலத்திலிருந்து உதயசூரியனை ரசிக்கும் புகைப்படம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

மேலும், சாலை மற்றும் பாலத்தில் சைக்கிளிங் செல்வது, சாலையோர உணவு விடுதியில் தேநீர் அருந்துவது, சக உடற்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடுவது, குரூப் போட்டோ மற்றும் செல்பி எடுத்துக்கொள்வது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com