“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!
“உளமாற உறுதி கூறுகிறேன்...” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவிலிருந்து சில துளிகள்..  

* சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக அரசு பதவி ஏற்பு விழா, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது. 

* காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அமைச்சர்களை ஆளுநருக்கு ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. 

* விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர்.

* பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர். 

* காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றனர். 

* விழாவில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியபோது, கவர்னர் பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். 

* மு.க.ஸ்டாலின் அண்ணன் மு.க. அழகிரி பங்கேற்கவில்லை. ஆனால் அவரது மகன் துரை தயாநிதி பங்கேற்றார். உதயநிதியும், துரை தயாநிதியும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்

* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... எனக்கூறி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது, அரங்கில் கூடி இருந்தவர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர். 

* மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

* முதல்வராக பதவி ஏற்று கொண்ட ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி  பூங்கொத்து அளித்தார்.

* பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com