இலக்கியவாதி கோவை ஞானி மறைவு : ஸ்டாலின் இரங்கல்

இலக்கியவாதி கோவை ஞானி மறைவு : ஸ்டாலின் இரங்கல்

இலக்கியவாதி கோவை ஞானி மறைவு : ஸ்டாலின் இரங்கல்
Published on

பேராசிரியரும், இலக்கியவாதியுமான கோவை ஞானி இறந்த செய்தி மிகுந்த துயரம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அவர், “தமிழ்ப் பேராசிரியரும், தமிழிலக்கிய சிந்தனையாளருமான கோவை ஞானி அவர்கள் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு நான் மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்ற அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பேராசிரியராகத் தொண்டாற்றியவர். தமிழ்மொழியை தன் உயிர் மூச்சாகக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட திறனாய்வு நூல்களை எழுதிய அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ் இலக்கிய சிந்தனையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com