ஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம் 

ஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம் 
ஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம் 

ஏழை, எளியோருக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கும் பட்ஜெட்டாக, மத்திய பட்ஜெட் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையிலோ, மாநில எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையிலோ மத்திய பட்ஜெட் இல்லை என்றும், வெறும் அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளுமே உள்ளதென்றும் குற்றஞ்சாட்டி உள்ளார். 

தமிழகத்திற்கென்று எந்தவித பிரத்யேக திட்டங்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என சாடியுள்ள ஸ்டாலின், கோதாவரி, கிருஷ்ணா, கா‌விரி நதிகள் இணைப்புக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு இல்லாமலும், மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சிக்கு முன்னோட்டம் ஆகவும் பட்ஜெட் உள்ளதாக விமர்சித்துள்ள அவர், சாதாரண சாமான்யர்களுக்கு எட்டாத தூரத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நட்டுவைக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com