\
முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்.! தாயார் மறைவுக்கு ஆறுதல்.!

முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்.! தாயார் மறைவுக்கு ஆறுதல்.!

முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்.! தாயார் மறைவுக்கு ஆறுதல்.!
Published on

முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதலமைச்சர் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், துணைப்பொதுச்செயலாளர் பொன்முடியும் சென்று மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com