கருணாநிதியின் பிறந்தநாள்.. திமுக சார்பில் பொதுக்கூட்டம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதிக்கு இன்று 96வது பிறந்த நாள். இதனையொட்டி திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தி.க தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூறும் வகையில் HBDKalaignar96 என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் கருணாநிதி குறித்த தங்களது நினைவலைகளை பகிர்ந்து வருவதோடு, வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.