தமிழ்நாடு
"எனக்கு ஒன்றும் இல்லை; லேசான மயக்கம், உடல் சோர்வு" - மு.க.ஸ்டாலின்
"எனக்கு ஒன்றும் இல்லை; லேசான மயக்கம், உடல் சோர்வு" - மு.க.ஸ்டாலின்
தனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு மட்டுமே இருந்தது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது உடல் சோர்வு ஏற்பட்டதால், கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையில் பரிசோதித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மற்றபடி ஏதும் இல்லை. சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்” என்றார்.