உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் மகாராஷ்டிரா அரசியல் களம் சற்று ஓய்ந்துள்ளது. சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட உத்தவ் தாக்கரே நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்கான பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய சிவசேனா திட்டமிட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதலமைச்சர்கள், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

சிவசேனா இந்துத்துவா கொள்கையை சார்ந்தவர்கள் என்பதால் இந்த விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது. பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிவசேனா திட்டமிட்டுள்ளதால், இந்த விழாவில் மேலும் பல பிரபலங்கள் மற்றும் ஏராளமான விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com