காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். 

ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, காவிரி மருத்துவமனை பகுதியில் திரண்டிருந்த திமுகவினர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழக்கங்களை எழுப்பிய அவர்கள், பேரி கார்டுகளை தள்ளிவிட்டனர். இதனால், காவேரி மருத்துவமனை பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com