\
கருணாநிதியின் இறுதி மரியாதை : எப்போது? எங்கு?

கருணாநிதியின் இறுதி மரியாதை : எப்போது? எங்கு?

கருணாநிதியின் இறுதி மரியாதை : எப்போது? எங்கு?
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படும்.

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறப்பால் நாளை விடுமுறை என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புக்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com