"திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்" - ஜே.பி.நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேச்சு

"திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்" - ஜே.பி.நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேச்சு
"திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்" - ஜே.பி.நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேச்சு

"திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்" என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அப்போது, “தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது; திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்” என்று கூறினார். குருமூர்த்தி பேசும் போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம்” என்று அருண் செளரி கூறியிருந்தார். 

“அவர் சொன்னது போல் திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது” என்றும் குருமூர்த்தி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com