\
மு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

மு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

மு. கருணாநிதி சிலை திறப்பு விழா - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு
Published on

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். 

இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அதனை வெண்கல சிலையாக மாற்ற பணிகள் நடைபெற்றது. மேலும், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அண்ணா அறிவாலயத்தில் புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. 

இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் ரஜினி, கமலை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com