தொடங்கியதும் ரத்து என அறிவிப்பு..திமுக உட்கட்சி பிரச்னையால் களேபரம்ஆன ஒன்றியக்குழு கூட்டம்

தொடங்கியதும் ரத்து என அறிவிப்பு..திமுக உட்கட்சி பிரச்னையால் களேபரம்ஆன ஒன்றியக்குழு கூட்டம்
தொடங்கியதும் ரத்து என அறிவிப்பு..திமுக உட்கட்சி பிரச்னையால் களேபரம்ஆன ஒன்றியக்குழு கூட்டம்

கும்பகோணத்தில் திமுக உட்கட்சி பிரச்னையால் இரண்டரை ஆண்டுககளாக நடைபெறாத ஒன்றியக் குழு கூட்டம் இன்று தொடங்கியது. ஆனால், தொடங்கியதுமே கூட்டம் ரத்து எனக்கூறி தலைவர் அரங்கை விட்டு வெளியேறியதால் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் 27 உறுப்பினர்கள் கொண்ட ஊராட்சி ஒன்றிய குழுவின் கூட்டம் இன்று ஒன்றிய அலுவலகத்தில் பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கிடையே இருக்கை போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒன்றியக் குழு தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத் தலைவர் உள்ளுர் கணேசன் (திமுக) அமர்ந்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக் குழு தலைவர் காயத்திரி அசோக்குமார் கூட்டம் தொடங்கியதுமே, கூட்டம் ரத்து எனக் கூறிவிட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றியக் குழு கூட்டத்தை நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேர் ஒன்றிய அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒன்றியக் குழு பெருந்தலைவர் காயத்திரி அசோக்குமார் மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் ஆதரவாளராகவும் துணைத் தலைவர் உள்ளுர் கணேசன் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் ஆதாரவாளராகவும் உள்ளதால் இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே நடைபெற்று வரும் உட்கட்சி பூசல்களால் ஒன்றிய பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை என்று அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com