\
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்?... பொருளாளர் டி.ஆர்.பாலு ?: வெளியாகும் தகவல்கள்..!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்?... பொருளாளர் டி.ஆர்.பாலு ?: வெளியாகும் தகவல்கள்..!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்?... பொருளாளர் டி.ஆர்.பாலு ?: வெளியாகும் தகவல்கள்..!
Published on

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.

பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக தெரிவித்துள்ளது.

பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கா டி ஆர் பாலு இன்று மதியம் அறிவாலயத்தில் மனு வாங்க வருகிறார். நேற்று டெல்லி சென்ற அவர் அவசரமாக இன்று மதியம் சென்னை திரும்புகிறார். இதன் மூலம் திமுகவின் பொருளாளர் பாலு என்பது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com