\
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
Published on

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். முதுமை காரணமாகக் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com