48 வருடங்களுக்கு பிறகு தொடங்கியது மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்!
மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாட்டுத்தாவணி முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் உத்தங்குடி பகுதி வரை ஆயிரக்கணக்கான மக்கள் வழி முழுவதும் கூடி வரவேற்றனர். இதற்காக, உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், சட்டமன்றத் தேர்தல், புதிய நிர்வாகிகள் நியமனம், பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 10000 மேற்பட்டவர்களுக்காக உணவு தயாரிக்க நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவையான விருந்து
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களுக்காக மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் உப்புக்கறி, கோலா உருண்டை, மட்டன் குருமா, வஞ்சரம் மீன் வருவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா, பீடா, மலை வாழைப்பழம் என 25 க்கும் மேற்பட்ட அசைவ உணவு மற்றும்
சைவ உணவு வகைகளான... கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரக்கறி, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ப்ரை, சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு என 25க்கும் மேற்பட்ட சைவ உணவு தயார் செய்து வருகின்றனர்.