திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு: ஸ்டாலின்

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு: ஸ்டாலின்

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு: ஸ்டாலின்
Published on

திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி உடன்பாட்டில் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக, அந்த கூட்டணியோடு இணையும் என்று தெரிகிறது. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடு இன்று முடிந்துவிட்டது. 

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 10 (புதுச்சேரி உட்பட) தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீடு முடிவுற்றது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு நிறைவு பெற்றுவிட்டது. தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை, நாளை மறுநாள் நடைபெறும். மனித நேய மக் கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்க இயலவில்லை. தேர்தலில் அவர்கள் ஆதரவை கோரியுள்ளோம். விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக கட்சி களிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி கேட்டுள்ளோம். அதுபற்றி அந்தக் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com