“கோவை சூழல் மாறிவிட்டது; காவல்துறையினர் கட்சி காரர்களாகவே மாறிவிட்டனர்”- வேலுமணி விமர்சனம்

“கோவை சூழல் மாறிவிட்டது; காவல்துறையினர் கட்சி காரர்களாகவே மாறிவிட்டனர்”- வேலுமணி விமர்சனம்

“கோவை சூழல் மாறிவிட்டது; காவல்துறையினர் கட்சி காரர்களாகவே மாறிவிட்டனர்”- வேலுமணி விமர்சனம்
Published on

"தேர்தலின் போது என்னை வேண்டுமென்றே விசாரணைக்கு அழைப்பார்கள். திமுக காவல்துறையை வைத்து தேர்தலை சந்திக்கிறது" என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் பேசும்போது, "சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக முக்கியமான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கோவையில் சூழல் மாறியுள்ளது வேட்புமனுத் தாக்கலின் இங்குள்ள அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் கேட்கின்றனர்.

இன்சியல் போடுவதிலும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இங்குள்ள காவல் துறையினரும் வேறுமாறி உள்ளனர். அமைதியான மக்கள் வாழும் பகுதி கோவை. ஆனால், காவல்துறை அதிமுகவுடன் வேலைக்குச் செல்பவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வழக்குப்பதிவு செய்கின்றனர்.

காவல்துறையினர் கட்சி காரர்களாகவே மாறிவிட்டனர். இவை வன்மையாக கண்டிக்கக் கூடியது. இது ஜனநாயக படுகொலை என குற்றம் சாட்டுகிறோம். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பவர்கள் திட்டங்களை சொல்லி வாக்கு கேளுங்கள்.

கோவையை பொறுத்தளவில் இது அதிமுக கோட்டை. உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக மேயர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கோவையில் வேகமாக பணிகள் நடைபெற்றன. தற்போது எங்கேயும் குப்பை எடுக்கவில்லை தண்ணீர் முறையாக விநியோகம் இல்லை.

இந்த ஆட்சியில் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வேலை செய்வதில்லை அதிமுகவினர் எல்லாரையும் பழி வாங்குகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் தேர்தலின் போது என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். காவல் துறையினரை வைத்துதான் தேர்தலை சந்திக்கின்றனர்.

நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது பத்திரிகையாளர்கள் அவ்வளவு விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை இப்போதும் ஆளும் கட்சியை விடுத்து எங்களையே பத்திரிகையாளர்கள் விமர்சிக்கின்றனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com