“திமுக தலைவராக ஸ்டாலின்” ! ஓகே சொன்ன செயற்குழு

“திமுக தலைவராக ஸ்டாலின்” ! ஓகே சொன்ன செயற்குழு
“திமுக தலைவராக ஸ்டாலின்” ! ஓகே சொன்ன செயற்குழு

திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அக்கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைவராக ஸ்டாலின் தான் நியமனம் செய்யப்படுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் உட்பட அனைவருமே ஸ்டாலினின் தலைமையை ஏற்க தயாராக உள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர். 

திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசுகையில் “திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார் ; பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர்  மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை” என்று பேசினார். கடைசியாக முடிக்கும் போது “தலைவராக உள்ள செயல்தலைவரே” என்று பேசி முடித்தார். 

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும் போது “ செயல் தலைவராக இருந்தாலும் கூட ஸ்டாலின் தலைவராக வரப் போகிறவர். திமுக தலைவர் கருணாநிதியாகத் தான் ஸ்டாலினை பார்க்கிறோம். கருணாநிதி விட்ட இடத்தில் இருந்து நீங்கள் தொடர வேண்டும். நிச்சயமாக தொடர்வீர்கள். உங்களுக்கு பின்னால் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும் ” என தெரிவித்தார்.

திமுக பேச்சாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில் “ மத்திய அரசு துமிகவை உடைத்து அழிக்கப் பார்க்கிறது. அதற்கு ஸ்டாலின் தலைமையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார். திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில் “ திமுக தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் ஸ்டாலின் தலைமையில் கட்சிக் கொடி பறக்கும் என்றார். 

 திமுகவை பொருத்தவரை தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுக்குழுவுக்கே இருக்கிறது. தலைவர்,பொருளாளர், பொதுச்செயலாளர் பதவி காலையாகும் போது 60 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டி , அந்த இடத்தை நிரப்ப வேண்டும். தலைவர் இல்லாத போது பொதுச்செயலாளரும், பொதுச்செயலளர் இல்லாத போது தலைவரும் பொதுக்குழு கூடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என திமுக கட்சி விதி கூறுகிறது. செயற்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் பேசியதையும், ஏற்கனவே கட்சியை ஸ்டாலின் தன் வசமாக்கி கொண்டதையும் வைத்து எந்த போட்டியும் இல்லாமல் அவரே தலைவராவார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com