தமிழ்நாடு
திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்..!
திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்..!
திமுக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக தேர்வாகியுள்ள ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலினும் கண் கலங்கினார்.
திமுக பொது குழு கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். மேலும் ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற தயாராக உள்ளதாக துரைமுருகன் உருக்கமாக பேசினார். கூட்டத்தில் துரைமுருகனின் பேச்சை கேட்டு திமுக செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினும் கண் கலங்கினார்.