\
ஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு?

ஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு?

ஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு?
Published on

சூலூரில் குலுக்கல் முறை ஏலச் சீட்டு நடத்தி 32 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு திமுக பிரமுகர் தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் திமுக முன்னாள் பேரூராட்சி கவுன்சிலராக இருந்தவர் ஜெயா. இவர் தற்போது திமுகவின் சூலூர் நகர மகளிர் அணி பொறுப்பாளராக உள்ளார். இவர் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தி வந்ததாக தெரிகிறது. அவரிடம் சூலூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம் ஒருமுறை எடுக்கக்கூடிய குலுக்கல் முறை ஏலசீட்டு போட்டு வந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் வசூலித்து விட்டு சீட்டு போட்ட 7 நபர்களுக்கு குலுக்கல் சீட்டு முறையில் பணத்தை கொடுத்துள்ளார் ஜெயா. ஆனால் மீதம் உள்ளவர்களுக்கு 32 லட்சம் ரூபாயை தராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com