திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : சென்னை அன்பகத்தில் இன்று கூடுகிறது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. அண்ணா அறிவாலயம் கட்டப்படும் முன், திமுகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்ட இடம் அன்பகம். அறிவாலயம் கட்டப்பட்ட பிறகு, திமுக இளைஞரணியின் அலுவலகமாக அன்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.