இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்
இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுகவே ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com