திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் கட்சித் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை குழு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. அதேபோல், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், ஐயூஎம்எல் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி ஜவஹருல்லா ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில் தற்போது ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

ஐயூஎம்எல், மமக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது விரைவில் தெரியவரும். இருப்பினும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com