’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி

’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி

"பேரறிவாளன் விடுதலையில் திமுகவை காங்கிரஸ் விமர்சிப்பதும், திமுக காங்கிரஸை விமர்சிப்பதும் புதிதல்ல" என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை. பேரறிவாளனை விடுவிக்கும் போது நீதிமன்றம் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்தே அதிமுக மற்றும் திமுக கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸார் தங்கள் கருத்தில் தெளிவாக உள்ளனர்.

இந்த விவகாரத்தில் திமுகவை காங்கிரஸ் விமர்சிப்பதும், திமுக காங்கிரஸை விமர்சிப்பதும் புதிதல்ல. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம். அவ்வளவு எளிதில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரித்துவிட முடியாது. எங்கள் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com