ஜெயலலிதாவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்

ஜெயலலிதாவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்

ஜெயலலிதாவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* திமுக செயல்தலைவராக ஸ்டாலின் நியமனம்

* தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

* தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

* ஜெயலலிதா, பிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

* 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசுக்கு கண்டனம்

* தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

* உயிரிழந்த தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்

* இதேபோல் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

* மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

* மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கச்சத்தீவு அந்தோனியார் கோயிலில் தமிழக மீனவர்கள் வழிபட அனுமதி வழங்க வேண்டும்

* இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அவர்களது படகுகளை ஒப்படைக்க வேண்டும்

* சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம்

* கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com