திமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்

மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. கடந்த 2006-11 ஆம் ஆண்டில் திமுக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்துள்ளார். 2013-ல் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரை எழும்பூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வைத்தார். ஆனால் அவர் ரவிச்சந்திரன் என்ற தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அவரது அணியில் இருந்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவர் அ.மு.ம.க.வில் இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ’பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது. சிறுவயதிலேயே திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு பாடுபாட்டவர். கருணாநிதியால் வீர இந்திரஜித் என்று அழைக்கப் பட்டவர். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். திமுக இளைஞரணி வளர என்னுடன் துணை நின்ற வர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com