இதுவரை வெளியான கருணாநிதியின் 5 மருத்துவ அறிக்கைகள்

இதுவரை வெளியான கருணாநிதியின் 5 மருத்துவ அறிக்கைகள்

இதுவரை வெளியான கருணாநிதியின் 5 மருத்துவ அறிக்கைகள்
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு கடந்த ஜூலை 27ம் தேதி சென்றது. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கருணாநதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்று முதல் காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் காவேரி மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 5 அறிக்கைகளை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. 

அறிக்கைகள் விவரம்:-

முதல் அறிக்கை (28.07.08 - மதியம் 2.30 மணி)

"திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது" 

இரண்டாம் அறிக்கை (28.07.08 - இரவு 9.00 மணி)

“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ உபகரண உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”

மூன்றாவது அறிக்கை (29.07.08 - இரவு 9.50 மணி)

“கருணாநிதியின் உடல்நிலையில் முதலில் பின்னடைவு ஏற்பட்டது, இருப்பினும் மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்”

நான்காவது அறிக்கை (31.07.08 - மாலை 6.30 மணி)

“கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி முழு ஒத்துழைப்பு தருகிறார். 29ம் தேதி ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ரத்தம், கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. வயது காரணமாக மருத்துவமனை உதவி அவருக்கு இன்னும் சில நாட்களுக்கு தேவைப்படுகிறது”

ஐந்தாவது அறிக்கை (06.08.08  - மாலை 6.30 மணி)

“கருணாநிதியின் வயது காரணமாக அவரது முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பது சவாலாக உள்ளது.  அவர் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை எப்படிஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஐந்தாவது அறிக்கை வெளியான பிறகு காவேரி மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. கருணாநிதியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். திமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர். மருத்துவமனை முன்பாக போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com